சோனாவுக்கு மாரடைப்பு
9/19/2011 3:55:01 PM
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனும் தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகருமான எஸ்.பி.சரண் மீது பாலியல் கூறி காவல் நிலையத்தில் புகார் தந்த நடிகை சோனா மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சோனாவின் புகாரைத் தொடர்ந்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சரண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பம் முதலே பதற்றமாக இருந்தார் சோனா. திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
Post a Comment