பூர்ணாவின் நூதன கலெக்ஷன்!

|


நடிகை பூர்ணா, நயன்தாரா, நடிகர் நெப்போலியனுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன தெரியுமா? வித்தியாசமான ஆல்பம் தயாரிப்பதில் இந்த மூவருக்கும் இடையே ஒற்றுமை உள்ளது.

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தற்போது கை நிறைய படங்கள் வைத்துள்ளார். நடிகர் நந்தாவுடன் வேலூர் மாவட்டம், பார்த்திபனுடன் வித்தகன் என்று ஓடி ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் இப்போது இவரை அதிகம் காண முடிவதில்லை. அதேசமயம் தெலுங்குப் பக்கம் இப்போது தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் பூர்ணா. அதன் விளைவாக கையில் ஒரு படம் வந்திருக்கிறதாம். தெலுங்கில் கவர்ச்சிதான் பிரதானம் என்பதால் அதற்கும் பூர்ணா பூரண சம்மதத்துடன் காத்திருக்கிறாராம்.

சரி பூர்ணாவுக்கும், நயன்தாரா, நெப்போலியனுக்கும் உள்ள ஒற்றுமைக்கு வருவோம். பூர்ணா தன்னைப் பற்றி நல்லபடியாக வரும் செய்திகளை, அதில் உள்ள போட்டோகளை வெட்டி எடுத்து தனி ஆல்பம் தயாரி்தது வருகிறார்.

தன்னைப் பாராட்டி, ஆரோக்கியமான முறையில் விமர்சித்து வரும் செய்திகள், அதனுடன் இணைந்த புகைப்படங்கள் என எந்தப் பத்திரிக்கையில் வந்தாலும் விட மாட்டாராம். உடனே கட் அன்ட் பேஸ்ட்தான்.

நடிகர் நெப்போலியன், நடிகை நயன்தாராவிடமும் இப்படிப்பட்ட ஆல்பம் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்த நியூஸையும் பூர்ணா கட் பண்ணி ஒட்டிடுவார்னு நம்புவோம்...
 

Post a Comment