9/19/2011 2:55:26 PM
இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், நிருபர்களிடம் கூறியதாவது: 'பூ', 'களவானி' படங்கள் பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது. இசை அமைக்கும்போது கிடைத்த இடைவெளியில் படம் இயக்கிப் பார்க்கலாம் என்று 'தேனீர் விடுதி'யை இயக்கினேன். அந்தப் படம் மூலம் சினிமா உலகின் இன்னொரு முகத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. படம் இயக்குவதிலும், தயாரிப்பதிலும் மும்முரமாக இருப்பதாக கருதிக் கொண்டு, இசை அமைப்புக்காக என்னை அணுக தயங்குகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சினிமா இயக்கியதும், தயாரித்ததும், மாற்று முயற்சி. அவ்வளவுதான். இசைதான் எனது முக்கிய பாதை. யாருமே தராத இசையை தரவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். தற்போது 'ரதம்' என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறேன். அடுத்து 'லட்சுமி' என்ற படத்துக்கு இசை அமைக்கிறேன். இசையை பிரதானமாக கொண்ட படத்துக்கு இசை அமைத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்பதே இப்போதைய லட்சியம்.
Post a Comment