ரெட்டியை 'கட்' பண்ணும் ஐடியா இல்லை! - சமீரா

|


சாதிப் பெயரை வெளியில் சொல்வதே அவமானம் என்ற ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் பலர் தங்கள் பெயருடன் ரெட்டி, மேனன், அய்யர், நாயர், நாயுடு, முதலியார் என சாதிப்பெயரைச் சேர்த்துக் கொண்டு அலப்பறை பண்ணுகிறார்கள்.

கேட்டால் குடும்பப் பெயர் என்று கூறி மழுப்புகிறார்கள். நடிகர்களில் யாருமே சாதிப்பெயரை சுமந்து கொண்டு திரிவதில்லை. தமிழில் மட்டுமல்ல, மற்ற மொழிகளிலும் கூட கிடையாது.

நடிகைகளின் இந்த சாதிப் பெயர் மோகத்தை கடுமையாக சாடி வருகின்றனர் சில தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பெப்ஸி அமைப்பைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் அதைக் கண்டு கொள்ளவே இல்லை நடிகைகள்.

இந்த நிலையில் நேற்று நடந்த வெடி பட பிரஸ் மீட்டில் பங்கேற்ற படத்தின் நாயகி சமீரா ரெட்டியிடம், ஏன் உங்களுக்கு இந்த சாதி வெறி? இதை மாற்றிக் கொள்ள மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

அதற்கு சமீரா அளித்த பதில் அவரது 'சாதிப் பெருமை'யை பறைசாற்றுவதாக அமைந்தது. அவர் கூறுகையில், "நான் எதற்காக இந்தப் பெயரை மாற்ற வேண்டும்.

சமீரா ரெட்டி என்பது நான் பிறந்தபோதே வைக்கப் பட்ட பெயர். ரெட்டி என்பது எனது குடும்பத்து பெயர். எங்கள் சமூகத்தின் பெருமை அது. அதை என் பெயருடன் சேர்த்து இருப்பதில் சந்தோஷப்படுகிறேன். அதை நீக்கவே மாட்டேன்," என்றார்.
 

Post a Comment