மனைவியை அடித்த கன்னட நடிகர் தர்ஷன் கைது

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மனைவியை அடித்த கன்னட நடிகர் தர்ஷன் கைது

9/10/2011 11:29:51 AM

பெங்களூர், : கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு வினீஷ் என்ற மகன் இருக்கிறான். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்குள் பிரச்னை எழுந்ததாகக் கூறப்படுகிறது. ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். கடந்தவாரம் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. வீட்டைவிட்டு விஜயலட்சுமி வெளியேறினார். 

பெங்களூர் பாபுஜிநகரிலுள்ள வித்யா என்பவர் வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமியை நேற்று முன்தினம் வலுக்கட்டாயமாக காரில் அழைத்துவந்த தர்ஷன், அவரை பலமாக தாக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வீட்டுக்கு வந்ததும் துப்பாக்கியை காட்டியும் தர்ஷன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து விஜயநகர் போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி நேற்று காலை புகார் செய்தார். தனியார் ஆஸ்பத்திரியில் அவரை  சேர்த்துவிட்டு தர்ஷனை போலீசார் கைது செய்தனர். 

இச்செய்தி காட்டுத்தீ போல் ரசிகர்களிடம் பரவியது. விஜயநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ரசிகர்கள் அவரை விடுவிக்குமாறு கோஷமிட்டனர். பஸ், கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.



 

Post a Comment