திருமணம் எப்போது? பிரபுதேவா அறிக்கை
9/10/2011 11:15:48 AM
9/10/2011 11:15:48 AM
சென்னை, : சரியான நேரம் வரும்போது திருமண தேதியை அறிவிப்பேன் என்று பிரபுதேவா கூறியுள்ளார்.
நயன்தாராவுடனான காதல் மற்றும் திருமணம் பற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்த பிரபுதேவா, இப்போது முதல் முறையாக தனது மவுனத்தை கலைத்துள்ளார்.
எப்போது திருமணம் என்பது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் விவாதிப்பதில்லை. ஆனால், என்னை பற்றியும் என் திருமணம் பற்றியும் ஏகப்பட்ட செய்திகள் வெளியாகி இருப்பதை இப்போதுதான் உணர்ந்தேன். சில நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் நயன்தாராவுடனான எனது திருமண தேதி, இடம் பற்றியெல்லாம் எழுதியுள்ளனர்.
அதில் உண்மை இல்லை. சரியான நேரம் வரும்போது எங்கள் திருமண தேதியை இந்த உலகத்துக்கு அறிவிப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் காதலுக்காக, முன்னணி நடிகையாக இருக்கும்போதே நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளார். இருவீட்டு பெற்றோர்களின் வாழ்த்துகளுடன் எங்கள் திருமணம் நடக்க வேண்டும் என நினைக்கிறோம். இருந்தாலும், 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' மாதிரியான சிறந்த கதைகள் கொண்ட படங்கள் வந்தால் எங்கள் திருமணம் வரை, நயன்தாரா நடிக்க தயாராக உள்ளார். இவ்வாறு பிரபுதேவா கூறியுள்ளார்.
Post a Comment