9/21/2011 11:39:48 AM
தமிழ், தெலுங்கு, இந்தியில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், 'நீதானே என் பொன்வசந்தம்'. தமிழில் ஜீவா, தெலுங்கில் ராம், இந்தியில் ஆதித்யா ராய் கபூர் ஹீரோக்களாக நடிப்பதாக இருந்தது. மூன்று மொழிக்கும் சமந்தா ஹீரோயின். இதன் ஷூட்டிங், ஒரே நாளில் மூன்று மொழிக்கும் நடந்து வந்தது. இந்நிலையில் தெலுங்கு ஹீரோ ராம், படத்தில் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சில நாட்கள் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் ராம் வெளியேறியது கவுதம் மேனனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி ராம் தரப்பில் விசாரித்தபோது, ''கவுதம் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கப் போவதாகத்தான் முதலில் சொன்னார். இதனால் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து கொடுத்தார் ராம். திடீரென்று மனம் மாறிய கவுதம் மூன்று மொழிகளில் இயக்கப் போவதாக சொன்னார். அப்படியென்றால் மேலும் சில மாதங்கள் கால்ஷீட் தேவைப்படும் என்பதால், ராம் மறுத்தார். ஏற்கனவே அவருக்கு தெலுங்கு பட கமிட்மென்ட் இருப்பதை சொல்லி சமாதானமாகவே இருவரும் பிரிந்தனர். மற்றபடி அவர்களுக்குள் பிரச்னை இல்லை' என்று தெரிவித்தனர். இதற்கிடையே, இந்தப் படத்தை தெலுங்கில் தயாரிக்கும் பெல்லம்கொண்டா சுரேஷூக்கும் ராமுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே ராம் விலகியதாகக் கூறப்படுகிறது.
Post a Comment