கல்யாணமாகலைன்னு எத்தனை முறைதான் சொல்வது- ஜெனிலியா எரிச்சல்

|


எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று இன்னும் எத்தனை முறை தான் சொல்வதோ என்று நடிகை ஜெனிலியா கடுப்பாகியுள்ளார்.

நடிகை ஜெனிலியாவுக்கும், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் திருமணம் நடந்துவிட்டது என்று அவ்வப்போது செய்திகள் வருவதும் அதை ஜெனிலியா மறுப்பதும் தொடர் கதையாகிவிட்டது.

இது குறித்து ஜெனிலியா கூறியதாவது,

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அனைவரிடமும் சொல்லிவிட்டுத் தான் திருமணம் செய்வேன். கடந்த 5 வருடங்களாக எனது திருமணத்தைப் பற்றியே பேசுகிறார்கள். என் தனிப்பட்ட வாழக்கையில் அப்படி என்ன தான் அக்கறையோ. நானும் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

தயவு செய்து இனிமேல் எனக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டது என்று பேசாதீர்கள். இதனால் என் குடும்பத்திலும், ரித்தேஷ் குடும்பத்திலும் சலசலப்பு ஏற்படுகின்றது. நானும் ரித்தேஷும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான். நட்பைத் தாண்டி எங்களுக்குள் வேறொன்றுமில்லை என்றார்.

இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள், 2012-ல் திருமணம் என்றார்களே. அப்போ அது அவ்வளவு தானா?

 

Post a Comment