9/14/2011 3:13:58 PM
'மயக்கம் என்ன' படம் அடுத்த தலைமுறையினரின் பிரச்னைகளை பேசுகிற படம் என்று இயக்குனர் செல்வராகவன் கூறினார். ஏயூஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், 'மயக்கம் என்ன'. தனுஷ், ரிச்சா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு ராம்ஜி. இசை ஜி.வி.பிரகாஷ்குமார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள செல்வராகவன் படம் பற்றி கூறியதாவது: இது அடுத்த தலைமுறை கதை. அவர்களின் பிரச்னைகளை பேசும் படம். இந்தப் படத்துக்கு 'இரண்டாம் உலகம்' என்று பெயர் வைத்திருந்ததாகக் கேட்கிறார்கள். அது வேறு படம். ஆர்யா, அனுஷ்கா நடிக்கிறார்கள். டிசம்பரில் ஷூட்டிங். 'மயக்கம் என்ன' படம் ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கும் நம் வீட்டு கதை என்று சொல்லலாம். தனுஷ், ரிச்சா இருவரையும் சுற்றிதான் கதை நகர்கிறது. ஆனால், இது காதல் கதை இல்லை. காதலும் உள்ள கதை. பெரும்பகுதி படம் முடிவடைந்துவிட்டது. இதில் நானும் தனுஷும் பாடல்கள் எழுதியுள்ளோம். அவை சிறப்பாக வந்துள்ளன. விரைவில் பாடல் வெளியீடு நடக்க இருக்கிறது.
Post a Comment