நல்ல விஷயத்தைப் பாராட்டுவதில் யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத உயரத்திலிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. காரணம் அவர் பாராட்டு உளப்பூர்வமானது. எதிர்ப்பார்ப்புகள், தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட உண்மையான பாராட்டு.
அந்த வகையில் ரஜினியிடம் சமீபத்தில் பாராட்டுப் பெற்றவர் ராகவா லாரன்ஸ்.
ரஜினியை தான் வணங்கும் ராகவேந்திரருக்கு சமமான அந்தஸ்தில் வைத்துப் போற்றுபவர் லாரன்ஸ். காரணம் லாரன்ஸை சினிமாவுக்குள் கொண்டுவந்தவரே ரஜினிதான். தானே கட்டணம் செலுத்தி லாரன்ஸை நடனக் கலைஞர்கள் சங்கத்தில் சேர்த்துவிட்டு, தன் படங்களில் வாய்ப்பு கொடுத்தவர் ரஜினி. இன்று லாரன்ஸ் இந்த உயரத்திலிருக்க முக்கிய காரணம் ரஜினிதான்.
அந்த நன்றியை இன்றும் மறக்காத லாரன்ஸ், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதை நிரூபித்து வருகிறார்.
தற்போது தனது இயககத்தில் வெளிவந்து சக்கைப் போடு போடும் காஞ்சனாவில் கூட, ஒரு பாடலில் ரஜினியின் பெருமையை சொல்லும் லாரன்ஸ், இந்தப் படம் ரஜினி ரசிகனின் வெற்றி என்று கூறியிருப்பார்.
இந்தப் படத்தை எப்படியாவது ரஜினிக்கு காட்ட விரும்பினாராம் லாரன்ஸ்.
இவரது விருப்பம் அறிந்த ரஜினி, ஓ.கே சொல்ல, பிரத்யேகமாக ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிலேயே படத்தை திரையிட்டு காட்டியிருக்கிறார் லாரன்ஸ்.
படத்தைப் பார்த்து முடித்ததும் லாரன்ஸை வெகுவாகப் பாராட்டியுள்ளார் ரஜினி. அப்படியே மறக்காமல், படத்தில் காஞ்சனாவாக நடித்த சரத்குமாரையும் பாராட்டியுள்ளார் ரஜினி. ஒரு பக்கம் பாக்ஸ் ஆபீஸில் காஞ்சனா சாதனை படைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தன் 'கடவுளே' படத்தைப் பார்த்து பாராட்டு மழை பொழிய, சந்தோஷத்தில் மிதக்கிறார் லாரன்ஸ்!

Post a Comment