நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு தள்ளுபடி

|


மனைவியை கொடுமைப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனுவை பெங்களூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலக்ஷ்மியை சிகரெட்டால் சுட்டும், துப்பாகியின் கைபிடியால் தலையில் அடித்தும், கொலை செய்யப்போவதாக மிரட்டியும் கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து விஜயலக்ஷ்மி போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரி்ல் விஜயநகர் போலீசார் தர்ஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் தர்ஷனுக்கு மூச்சுத் திணறல், மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து ராஜீவ்காந்தி இருதய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெங்களூர் 1-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தர்ஷன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது தர்ஷன் மனைவி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் தர்ஷன் தன்னைத் தாக்கவில்லை என்றும், பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் தர்ஷனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
 

Post a Comment