சாலை விபத்துகள் சம்பவம் அல்ல சாபம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சாலை விபத்துகள் சம்பவம் அல்ல சாபம்

9/10/2011 11:24:06 AM

சென்னை, : பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம், 'எங்கேயும் எப்போதும்'. அவரது உதவியாளர் சரவணன் இயக்கி உள்ளார். ஜெய், ஷர்வானந்த், அஞ்சலி, அனன்யா நடித்துள்ளனர். வரும் 16&ம் தேதி வெளிவருகிறது. படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கூறியதாவது:

இன்றைக்கு மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்னை சாலை விபத்துகள். பொறுமையின்மையால், கவனக்குறைவால் நடப்பது நமக்கோ, நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ நடக்காத வரை அதை சம்பவமாக பார்க்கிறோம். ஆனால் அது பாதிக்கப்படுபவர்களுக்கு பெரிய சாபம். ஒரு விபத்தின் சாவு அந்த குடும்பத்தின் 50 வருட வாழ்க்கையை பாதிக்கிறது. 

எனது நணபன் இயக்குனர் திருப்பதிசாமி விபத்தில் இறந்தபோது இதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். இந்தப் படத்தில் இரு அழகான காதல் இருக்கிறது. அந்த காதலுக்கு வில்லன் விபத்துதான். மக்களிடையே விபத்து பற்றியும், சாலை பயணம் பற்றியும் இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும். நல்ல மெசேஜை கமர்சியல் சினிமாவுக்கான அம்சங்களோடு யதார்த்தமாக சரவணன் சொல்லியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது படத்தின் இயக்குனர் சரவணன், இசை அமைப்பாளர் சத்யா, ஜெய், ஷர்வானந்த், அஞ்சலி உடன் இருந்தனர்.



 

Post a Comment