9/23/2011 10:34:27 AM
மது விருந்தின்போது நடிகை சோனாவை பாலியல் ரீதியாக எஸ்.பி.பி.சரண் தொல்லை கொடுத்தாக நடிகை சோனா போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து சோனாவை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கு இரு வார இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் மறுஉத்தரவு வரும்வரை தினமும் காலை 8 மணிக்கு பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சரண் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி கூறினார். முன்னதாக, எஸ்பிபி சரண் தன்னிடம் தவறாக நடந்ததற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறி அவற்றை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தார் சோனா. மேலும் இன்று (வெள்ளிக்கிழமைக்குள்) சரண் தன்னிடம் மன்னிப்புக் கேட்டால் வழக்கை வாபஸ் வாங்குவதாகவும் அவர் கூறியிருந்தார்.
Post a Comment