9/24/2011 11:41:43 AM
நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால் மீண்டும் படம் இயக்கவில்லை என்றார் தம்பி ராமய்யா. 'மனுநீதி', இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படங்களை இயக்கியவர் இவர். தற்போது 'கும்கி' ஷூட்டிங்கில் இருக்கும் அவர் கூறியதாவது: புதுமுகங்களை வைத்து நான் இயக்கி நடித்துள்ள 'ஒரு கூடை முத்தம்' விரைவில் ரிலீசாகிறது. தேசிய விருது வாங்கிய பிறகு நிறைய படங்களில் நடிக்க கேட்கிறார்கள். 'மைனா'வில் கையில் விலங்கு வைத்துக்கொண்டு நடித்தேன். 'கும்கி'யில் மிகப் பெரிய விலங்கான யானையுடன் நடிக்கிறேன். இதையடுத்து 'சாட்டை', 'கழுகு', 'வாகை சூட வா', 'ஒஸ்தி', 'வேட்டை', 'ராஜபாட்டை' படங்களும் இருக்கின்றன. என் உதவியாளர் ஜெய்சங்கர் இயக்குனராகும் 'மன்னாரு' படத்துக்கு வசனம், பாடல்கள் எழுதி நடிக்கிறேன். இதில் அப்புக்குட்டி ஹீரோ. இப்போது நடிப்பில் முழுநேரம் கவனம் செலுத்தி வருவதால், மீண்டும் படம் இயக்கவில்லை.
Post a Comment