9/24/2011 11:48:28 AM
'திருட்டுப்பயலே' படத்தை இந்தியில், 'ஷாட்கட் ரோமியோ' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் சுசி கணேசன். ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா நடித்த படம், 'திருட்டுப் பயலே'. இதை சுசி கணேசன் இயக்கியிருந்தார். இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இயக்கிய சுசி கணேசன் இந்தியிலும் இயக்குகிறார். அமிஷா பட்டேலுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கும் சுசி கணேசன், இதுபற்றி கூறியதாவது: நீண்ட நாட்களுக்கு முன்பே இந்தப் படம் தொடங்க வேண்டியது. சில காரணங்களால் லேட் ஆகிவிட்டது. ஜீவன் கேரக்டரில் நீல் நிதின் முகேஷும், மாளவிகா கேரக்டரில் அமீஷா பட்டேலும் நடிக்கிறார்கள். சோனியா அகர்வால் கேரக்டருக்கு தமிழ் ஹீரோயினை நடிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறோம். சில நடிகைகளிடம் பேசி வருகிறோம். இன்னும் முடிவாகவில்லை. இந்திக்காக, சில காட்சிகளில் மாற்றம் செய்துள்ளேன். ஹிமேஷ் ரேஷ்மியா இசை அமைக்கிறார். டெக்னிக்கலாக மிரட்டும் விதத்தில் படத்தை எடுக்க இருக்கிறோம். டிசம்பரில் ஷூட்டிங் தொடங்குகிறது. இவ்வாறு சுசி கணேசன் கூறினார்.
Post a Comment