இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் நடிப்பது நல்ல அனுபவம்தான் என்றார் டாப்ஸி. தற்போது தெலுங்கு படங்களில் நடித்துவரும் டாப்ஸி, கூறியதாவது: ஒவ்வொரு படத்தின் இயக்குனர்தான் ஹீரோயின்களை தேர்வு செய்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் கேரக்டருக்கு யார் பொருந்துவார் என்பதை அவர்தான் முடிவு செய்கிறார். அதனால் இப்படி நடித்திருக்கலாமே, அதை செய்திருக்கலாமே என்று கூறுவது நான் பொருட்படுத்தமாட்டேன். தெலுங்கு படங்களில் இரண்டு ஹீரோயின்களுடன் நடிக்கிறீர்களே என்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. கேரக்டரை மட்டும்தான் பார்க்கிறேனே தவிர, உடன் நடிப்பது எத்தனை ஹீரோயின், எத்தனை ஹீரோ என்று பார்ப்பதில்லை. சிலர், 'படத்தில் இவர்கள் முதல் ஜோடி. அவர்கள் இரண்டாவது ஜோடி' என்று சொல்வதை கேட்டு வெறுப்புதான் வருகிறது. இதை நான் விரும்பவில்லை. ஒரு படம் என்றால் அனைவருமே முக்கியமானவர்கள்தான். இதில் சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்க முடியாது. தமிழ், தெலுங்கை அடுத்து இந்தியில் டேவிட் தாவன் படத்தில் நடிக்கிறேன். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.
Post a Comment