பி.காம். பட்டதாரியை மணக்கும் இயக்குனர் பி. வாசு மகன் ஷக்தி

|


சென்னை: பிரபல இயக்குனர் பி. வாசுவின் மகன் ஷக்தி தன் நீண்ட நாள் காதலியான ஸ்மிருதியை வரும் 31-ம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

இயக்குனர் பி. வாசுவின் மகன் பிரஷாந்த்(எ) ஷக்தி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார். தொட்டால் பூ மலரும், மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அரபு நாடே அசந்துபோகும் அழகியா நீ என்ற அவருடைய பாடல் மிகவும் பிரபலமாகும்.

ஷக்தி சென்னை மாம்பாக்கத்தைச் சேர்ந்த முரளி-துஷிதா தம்பதியின் மகளான ஸ்மிருதியை காதலித்து வந்தார். இவர்கள் காதல் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. வழக்கமான பெற்றோர்கள் போன்று விண்ணுக்கும், மண்ணுக்கும் குதிக்காமல் வாசுவும், முரளியும் இவர்கள் காதலுக்கு பச்சைக் கொடிகாட்டிவிட்டனர். முரளி பி. வாசுவின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்மதம் தான் கிடைத்தாகிவிட்டதே அடுத்து நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் 31-ம் தேதி காலை 9 மணிக்கு இவர்கள் திருமணம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடக்கிறது.

முன்னதாக வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும், 31-ம் தேதி காலை 6 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
 

Post a Comment