தமிழில் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் சாரா ஜானே டயஸ். இப்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: தமிழில் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். தெலுங்கில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பவன் கல்யாண் ஜோடியாக 'பாஞ்சா' படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் தெலுங்கில் என்னை நிலை நிறுத்தும் என நினைக்கிறேன். இந்தியில் அபிஷேக் பச்சனுடன் நடித்த 'கேம்' படத்துக்குப் பிறகு ஏக்தா கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். சினிமா துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது நடிகைகள் வந்துகொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்தான். ஒரு சிலர் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால் ரசிகர்களுக்குப் போரடித்துவிடும். அதனால் இதை போட்டியாகப் பார்க்கவில்லை. இங்கு யாரும் யாருக்குப் போட்டியல்ல. நான் சினிமா பின்னணி இல்லாமல்தான் இத்துறைக்கு வந்தேன். என்னையும் அரவணைத்து ஏற்றுக்கொண்ட சினிமாதுறை நல்ல வாய்ப்புகளை வழங்கி வருகிறது. தொடர்ந்து நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு சாரா கூறினார். அவரிடம், கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியை காதலிக்கிறீர்களாமே என்று கேட்டதும் இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றார். பின்னர், 'நான் தனியாகத்தான் இருக்கிறேன். இதையே பெரிதும் விரும்புகிறேன்' என்று சொன்னார்.
Post a Comment