ஐஸ்வர்யாவுக்கு என்ன குழந்தை? 150 கோடிக்கு சூதாட்டம்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு என்ன குழந்தை பிறக்கும் என்பது தொடர்பாக ரூ.150 கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது. இதில் மும்பை தாதாக்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் வீரர்கள் மீதுதான் இதுவரை கோடிக்கணக்கில் சூதாட்டம் நடந்தது. இம்முறை சற்று வித்தியாசமாக சூதாட்டம் நடக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு பதிலாக இதில் சிக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராய். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு 11.11.11 தேதியில் (நாளை) தான் குழந்தை பிறக்கும் என்று பலர் கூறி உள்ளனர். ஆனால் சிலர் இதில் மாறுபடுகின்றனர்.

குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதிதான் குழந்தை பிறக்கும் என்று கூறி வருகின்றனர். எந்த நாளில் குழந்தை பிறக்கும் என்பதை வைத்து மும்பை தாதாக்கள் சூதாட்டம் நடத்துகின்றனர். இதுதவிர ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்ற பந்தயமும்  சூடுபிடித்துள்ளது. இதை மையமாக வைத்து ரூ.150 கோடிக்கு உலகம் முழுவதும் சூதாட்டம் நடக்கிறதாம். மும்பை தாதாக்கள்தான் இதில் அதிகம் ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு சிலர் ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் தொடர்பு கொண்டு, 'ஐஸ்வர்யாவுக்கு எப்போது, என்ன குழந்தை பிறக்கும்Õ என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களிடம் பேசுவதை டாக்டர்கள் தவிர்த்து வருகின்றனர்.  'ஐஸ்வர்யாவை மையமாக வைத்து கோடிக்கணக்கில் சூதாட்டம் நடப்பது பற்றி தகவல் வந்துள்ளது. இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறோம்Õ என்று மும்பை போலீசார் கூறி உள்ளனர்.


 

Post a Comment