அழகன் அழகியில் 60 புதுமுகங்கள்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புதுமுகங்கள் ஜாக், ஆருஷி ஜோடியுடன் ஆர்த்தி, சாம், ரவிமரியா, ஜி.எம்.குமார், ராஜலட்சுமி, கஸ்தூரி நடிக்கும் படம், 'அழகன் அழகி'. கிரீன் 2 சினிமா நிறுவனம் சார்பில் குருராஜன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, பிரபு தயாளன். இசை, கண்ணன். பாடல்கள்: நா.முத்துக்குமார், சினேகன், கபிலன், விவேகா. படத்தை இயக்கும் நந்தா பெரியசாமி கூறியதாவது: சேனல் ஒன்று ஊர், ஊராகச் சென்று 'அழகன் அழகி' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. அப்போது ஹீரோ, ஹீரோயின் இருவரும் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கின்றனர். ஒவ்வொருவருடைய வித்தியாசமான வாழ்க்கைச்சூழலைப் பார்க்கும் அவர்கள், இறுதியில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது கதை.

சினிமா வாடையே இல்லாத 60 பேர் அறிமுகமாகின்றனர். சமீபத்தில் சில கவிஞர்களை வரவழைத்து, அவர்களிடம் சிச்சுவேஷன் சொன்னோம். அதற்கு அவர்கள் எழுதிய கவிதைகளில் சில வரிகளைத் தேர்வு செய்து, மூன்று பேரை வைத்து அந்தப் பாடலை எழுத வைத்தோம். பிருந்தா சாரதி, கருணாநிதி, சரண் ரவி இணைந்து எழுதிய அந்தப் பாடல், 'பெண்ணே பெண்ணே வானிலையில் மாற்றம்' என்று தொடங்குகிறது. தன்னம்பிக்கையூட்டும் ஒரு பாடல் காட்சியில் கஸ்தூரி ஆடியுள்ளார்.


 

Post a Comment