'வம்சம்' படத்துக்கு பிறகு இடைவெளி விட்டதற்கு காரணம் பாவாடை தாவணிதான் என்று சுனேனா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: 'வம்சம்' படத்தில் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்தேன். அது நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதற்கு பிறகு வந்த நான்கைந்து படங்கள் அதே மாதிரி பாவாடை தாவணி அணியும் கிராமத்து பெண்ணாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் பாவாடை தாவணி என்றாலே பயப்படும் நிலை வந்தது. அதனால் இடைவெளி விட்டேன். அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. 'சமரன்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இதில் த்ரிஷாவும் நடிக்கிறார். இதுதவிர ராசு மதுரவன் படத்திலும் நடிக்க இருக்கிறேன். இரண்டு படத்திலும் கிராமத்து பெண் வேடம் இல்லை. மாடர்ன் பெண்ணாக நடிக்கிறேன். நடித்து முடித்துள்ள 'திருத்தணி', 'கதிர்வேல்' படங்களும் வெளிவர இருக்கிறது. 'சமரன்' படம் என்னுடைய இன்னொரு பரிமாணத்தை காட்டுவதாக இருக்கும்.
Post a Comment