தெலுங்கில் வெளியான சந்தோஷ் சிவனின் உறுமி தமிழிலும் வெளியாகிறது. வருகிற 15ஆம் தேதி இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது. வாஸ்கோடகாமாவின் மரணத்தின் பின்னணியில் சந்தோஷ் சிவன் உருவாக்கியிருக்கும் சரித்திரப் படமான இதில் பிருத்விராஜ், ஜெனிலியா, பிரபுதேவா, பிந்து மாதவி, வித்யாபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை தமிழில் உறுமி என்ற பெயரில் வெளியிடுகின்றனர். முன்னதாக 15ஆம் தேதி ஆடியோ விழா நடக்கிறது. இந்த விழாவில் விஜய், ஆர்யா, முருகதாஸ், மணிரத்னம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தீபக் தேவ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
Post a Comment