இயக்குனருடன் நடிப்பது கடினம்: பூர்ணா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனருடன் நடிப்பது கடினமானது என்று பூர்ணா கூறினார். பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் 'வித்தகன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பூர்ணா. வரும் 18-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி பூர்ணா கூறியதாவது: நிறைய ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் முதன் முதலாக இயக்குனருடன் நடித்திருப்பது 'வித்தகன்' படத்தில்தான். பொதுவாக கமர்சியல் படங்களில் ஹீரோயின்களுக்கு பெரிய வேலை இருக்காது என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் எனக்கு பெரிய பங்கு இருக்கிறது. கிறிஸ்தவ பெண் கேரக்டர். பார்த்திபன் செய்யும் எல்லாவற்றுக்கும் நான் மட்டுமே சாட்சி. ஆக்ஷன் காட்சிகளில் கூட நடித்திருக்கிறேன். வியட்நாம், செக் குடியரசு நாடுகளுக்கு சென்று பாடல் காட்சியில் வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் ஆடியது புதிய அனுபவமாக இருந்தது. பார்த்திபன் இல்லாத காட்சிகளில் எளிதாக நடித்து விட்டேன். அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் நடிப்பது கோச்சுடன் சேர்ந்து விளையாடு மாதிரி இருந்தது. சிறிய தவறையும் உடனே கண்டுபிடித்து விடுவார். அதனால் பயந்து கொண்டே நடித்தேன். இயக்குனர்களே ஹீரோவாக நடிக்கும்போது அவர்களுடன் நடிப்பது கடினமானது என்பது புரிந்தது. மற்ற படங்களை விட இதில் நான் கூடுதல் அழகாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.




 

Post a Comment