'ஒரு நடிகையின் வாக்குமூலம்' கற்பனை கதைதான் என்று சோனியா அகர்வால் கூறினார். 'புன்னகை பூ' கீதா தயாரிக்கும் படம், 'ஒரு நடிகையின் வாக்குமூலம்'. சோனியா அகர்வால் நடிக்கும் இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு வெளியிட்டனர். பின்னர் சோனியா அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஹீரோயினாக நடிக்கிறேன். ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ரகசியங்கள் இருப்பது போல், நடிகையின் வாழ்க்கையிலும் இருக்கும். என் வாழ்க்கையிலும் இருக்கிறது. கண்டிப்பாக அதை சொல்ல மாட்டேன். இந்தப் படத்தின் கதைக்கும், என் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. இது கற்பனைக் கதை. இந்தியில் 'டர்ட்டி பிக்சர்' ரிலீசாகிறது. தமிழில் இப்படம் உருவாகி, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஏற்கனவே மலையாளத்தில் இதுபோன்ற கதையுடன் படம் வந்துள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்த விஷயம்தான். இவ்வாறு அவர் கூறினார். விழாவில், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், ராஜ்கபூர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமலன் தொகுத்து வழங்கினார். இறுதியில் ராஜ்கிருஷ்ணா நன்றி கூறினார்.
Post a Comment