பார்த்திபனிடம் கேட்டபோது, கூறியதாவது: பாரதிராஜா போன் செய்து, தான் இயக்கும் படத்தில் கட்டுவிரியன் என்ற கேரக்டரில் நடிக்க கேட்டார். ஒப்பந்தமானேன். அட்வான்சும் கொடுத்தனர். 10ம் தேதி போட்டோ ஷூட்டில் பங்கேற்க வேண்டும் என்றார்கள். தயாராக இருந்தேன். இந்நிலையில், போட்டோ ஷூட்டில் அமீர் பங்கேற்றதாக சொன்னார்கள். எனக்கு எந்த விஷயமும் அறிவிக்கப்படவில்லை. என் 20 வருட சினிமா வாழ்வில் இப்போது நடந்த நிகழ்வு புது அனுபவமாக இருக்கிறது. சரி, இது ஒன்றும் சீமந்த நிகழ்ச்சி இல்லையே. சென்டிமென்ட் பார்ப்பதற்கு. இது சினிமா. இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம் என்று எடுத்துக்கொண்டேன். அமீரும் அந்த கேரக்டருக்கு பொருத்தமாகத்தான் இருப்பார். நான் இயக்கி, என் நடிப்பில் உருவான 'வித்தகன்'18ம் தேதி ரிலீசாகிறது. அது சம்பந்தமாகத்தான் என் சிந்தனை சுழன்று கொண்டிருக்கிறது.
Post a Comment