பெங்காலி படத்தில் நடிக்கிறார் பத்மப்பிரியா. பிரபல பெங்காலி நாவலாசிரியர் சுனில் கங்கோபாத்யாயா எழுதிய நாவல் ஒன்று 'அபராஜிதா துபி' என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் பத்மப்பரியா நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பொதுவாக எல்லா தென்னிந்திய நடிகைகளுக்கும் இந்தி கமர்சியல் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். எனக்கு இருந்த ஆசை பெங்காலி படத்தில் நடிக்க வேண்டும் என்பது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. அதுவும் எனக்குப் பிடித்த எழுத்தாளரின் கதையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சான்பிரான்ஸிஸ்கோவில் பிறந்து பெங்காலி வரும் பெண்ணின் முழு நீள வாழ்க்கைதான் படம். எனக்கு பெங்காலி மொழி தெரியாது. இருந்தாலும் அடிப்படையான விஷயங்களை கற்று நானே பேசி நடித்தேன். நான் பேச வேண்டிய வசனத்தை மனப்பாடம் செய்து டப்பிங் பேசியிருக்கிறேன். எனது கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும்.
Post a Comment