சமுத்திரக்கனி இயக்கியுள்ள 'போராளி' படம் இந்தியில் தயாராகிறது. சசிகுமார், நரேஷ், ஸ்வாதி, நிவேதா நடிக்கும் படம், 'போராளி'. கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் சசிகுமார் தயாரிக்கிறார். படத்தை இயக்கும் சமுத்திரக்கனி கூறியதாவது: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கிறது. அந்த கனவை, லட்சியத்தை நோக்கிதான் எல்லாரும் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியொரு பயணத்தை தேடும் நான்கு பேரின் கதைதான் போராளி. இது வித்தியாசமான கதைதான். ஒரு வகையில் நம் எல்லோருமே போராளிதான். நினைத்ததற்காகப் போராடும் போராளி. இந்தக் கருத்தை எளிமையாக, கமர்சியலாக படத்தில் சொல்லியிருக்கிறோம். 'நாடோடிகள்' படத்திலிருந்து இது மாறுபட்ட தளத்தில் இருக்கும். சசிகுமார் இரண்டு கெட்டப்பில் நடித்துள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காமெடி இருக்கும். தமிழ், தெலுங்கில் டிசம்பர் முதல்வாரம் ரிலீஸ் ஆகிறது. இந்தியில் ரீமேக் செய்யும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். இவ்வாறு சமுத்திரக்கனி கூறினார்.
Post a Comment