காந்தம் பட இசை வெளியீடு

|


காந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. பாடல்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டனர்.

காந்தம் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி நாயகனாக நடிக்கிறார் தேஜ். இவர் ஏற்கெனவே கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தில் நாயகனாக நடித்தவர். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் புதுமுகம் ரஷ்மி.

அன்பால் அனைவரையும் ஈர்க்க முடியும்... அன்பே அத்தனைப் பிரச்சினைக்கும் சரியான தீர்வு என்பதை இந்தப் படம் சொல்கிறது என்கிறார் இயக்குநர் ஷரவணா. இவருக்கும் இது முதல் படம்.

இந்தப் படத்தில் மலேஷியாவைச் சேர்ந்த நடிகை பூவேஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரேம் சங்கர் ஒளிப்பதிவு செய்ய, பிரதாப் இசையமைத்துள்ளார்.

இதே படம் அயஸ் காந்தம் என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகிறது.

காந்தம் படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை அபிராமி மெகா மாலில் நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினர்.
 

Post a Comment