கண்ணன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், 'கரிகாலன்'. சரித்திரப் பின்னணி கதை கொண்ட இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இதில், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் அஞ்சலி. 'தற்போது வசந்தபாலனின் 'அரவான்', விமலுடன் 'மசாலா கபே' படங்களில் நடித்து வருகிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அவரது தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் நான்தான் ஹீரோயின். 'கரிகாலன்' படத்தில் ஏற்றுள்ள கேரக்டருக்காக, குதிரை சவாரி, வாள் வீசும் பயிற்சி பெற்று வருகிறேன். டிசம்பர் 10ம் தேதி முதல், ஐதராபாத்தில் விக்ரமுடன் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாகிறது' என்றார் அஞ்சலி.
Post a Comment