தெலுங்கு ஹீரோ ஜுனியர் என்டிஆரோடு இலியானா நடித்த படம், 'சக்தி'. இது தமிழிலும் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் நடித்தபோது பலவிதமான பிரச்னைகளை சந்தித்ததாகப் புகார் கூறினார் இலியானா. இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 'சொன்ன கதை ஒன்று எடுத்த கதை ஒன்று' என்று இயக்குனரையும் ஜூனியர் என்டிஆரையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், சீனு வைட்லா இயக்கும் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். இதில் ஹீரோயினாக, இலியானாவிடம் கேட்கலாம் என்று இயக்குனர் கூறினார். கடுப்பான ஹீரோ, 'தயவு செய்து இலியானா வேண்டாம். வேறு யாரை வேண்டுமானாலும் ஹீரோயினாகப் போட்டுக்கொள்ளுங்கள்'என்றாராம். தெலுங்கு பட உலகில் இச்செய்தி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'இலியானாவும் ஜூனியர் என்டிஆரும் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளனர். அவர்களுக்குள் பிரச்னை ஏதும் இல்லை. இந்தப் படத்தில் கண்டிப்பாக இணைவார்கள்' என்கிறது இலியானா தரப்பு.
Post a Comment