'மல்லுசிங்' என்ற மலையாளப் படத்தில் மீரா நந்தன், பஞ்சாபி பெண்ணாக நடிக்கிறார். இதற்காக பஞ்சாபி மொழி கற்று வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழில் 'சூரியநகரம்' படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். கலகலப்பான கிராமத்து பெண் வேடம். 'அய்யனார்' தவிர மற்ற எல்லாப் படங்களிலுமே கிராமத்து பெண் வேடத்தில்தான் நடித்திருக்கிறேன். ஒரு படத்திலாவது கமர்சியல் ஹீரோயின் மாதிரி ஆடிப்பாடி நடிக்க ஆசை. அது விரைவில் நிறைவேறும் என்று நினைக்கிறேன். மலையாளத்தில் 'சொர்ப்ப சஞ்சாரி' படம் வெளிவர இருக்கிறது. இதில் டாக்டராக நடித்திருக்கிறேன். அடுத்து 'மல்லுசிங்' படத்தில் பஞ்சாபி பெண்ணாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். இது ஹீரோயின் சப்ஜெக்ட். பஞ்சாபி பெண், கேரள வாழ்க்கை முறையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் கதை. இதற்காக பஞ்சாபி மொழி பேசக் கற்று வருகிறேன்.
Post a Comment