'தாய்வீடு', படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை அனிதா ராஜ். கமல்ஹாசன், சஞ்சய் தத், தர்மேந்திரா உட்பட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர், சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். இதுபற்றி அனிதா ராஜ் கூறியதாவது: 1981ம் வருடம் 'பிரேம் கீத்' படம் மூலம் இந்தியில் அறிமுகமானேன். பல்வேறு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2007ம் ஆண்டு, 'தொடீ லைஃப் தொடா மேஜிக்' என்ற படத்தில் ரீ என்ட்ரி ஆனேன். அந்தப் படத்தை மக்கள் பார்க்கவில்லை. அதனால் நல்ல கேரக்டருக்காக காத்திருந்தேன். இப்போது சமீர் கார்னிக் இயக்கும் 'ஜார் தீன் கி சாந்தினி' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். ஹீரோவுக்கு அம்மாவா என்பதை இப்போது நான் சொல்ல இயலாது. அதை இயக்குனர்தான் சொல்ல வேண்டும். படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு அனிதா ராஜ் கூறினார்.
Post a Comment