சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை, 'த டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் இந்தியில் படமாக எடுத்துள்ளனர். இதற்காக சில்க் ஸ்மிதாவின் படங்களைப் பார்த்தும் அவரிடம் நெருங்கி பழகியவர்களிடம் பல தகவல்களை சேகரித்து அதை படமாக்கியுள்ளனர். இதில் சில்க் ஸ்மிதாவாக, இந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சில்க் ஸ்மிதாவின் சகோதரர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் வித்யா பாலன், திடீரென பல்டி அடித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகையை பற்றிய கதைதான் இது. ஆனால் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை அல்ல. சில்க் என்ற பெயரில் நடனக் கலைஞராக நான் நடிக்கிறேன். சூரியகாந்த் என்ற கேரக்டரில் நஸ்ரூதின் ஷா நடிக்கிறார். அவர் சீனியர் நடிகர். இருந்தாலும் அவருடன் நடிக்கும்போது அந்த கேரக்டரைத்தான் பார்த்தேன். எண்பதுகளில் நடப்பது போல் படத்தின் கதை செல்வதால் அந்த காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் எந்த மாதிரியான உடை அணிந்தார்களோ அது படத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் முழுவதுமாக, நூறு உடைகள் அணிந்து நடித்துள்ளேன். படத்தில் மெசேஜ் என்று எதுவும் இல்லை. என்டர்டெயின்ட்மென்ட்டாக இருக்கும். இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.
Post a Comment