பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். பாலிவுட்டில் அசத்தி வரும் பிரியங்கா முதலில் சினிமாவிற்கு அறிமுகமானது தமிழில் தான். இளைய தளபதி விஜய்யுடன் 'தமிழன்' படத்தில் நடித்த பிரியங்கா, பாலிவுட் கவனம் செலுத்தி வருகிறார். இந்தி தவிர எந்த ஒரு மொழி படத்தையும் அவர் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. இதனையடுத்து, இந்தி பட ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சி வந்த பிரியங்கா, மீண்டும் தமிழ் படத்தில் ஆசையாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சரியான கதை தமிழில் அமைந்தால் நான் மீண்டும் தமிழில் நடிப்பேன் என்று அவர் கூறினார்.
Post a Comment