'நடிகை சினேகாவும் நானும் காதலிப்பது உண்மைதான். எங்கள் திருமணம் இரு வீட்டு சம்மதத்துடன் நடக்கும்' என நடிகர் பிரசன்னா கூறினார். 'பைவ் ஸ்டார்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் பிரசன்னா. தொடர்ந்து 'மஞ்சள் வெயில்', 'சாது மிரண்டா', 'சீனா தானா 001', 'நாணயம்', 'முரண்' உள்பட பல படங்களில் ஹீரோவாகவும், 'அஞ்சாதே' படத்தில் வில்லனாகவும் நடித்தார். சினேகாவும், பிரசன்னாவும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் 2 மாதங்கள் நடந்தது. அப்போது சினேகாவும், பிரசன்னாவும் நட்புடன் பழகினர்.
நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதை இருவரும் மறுத்து வந்தாலும் வெளியிடங்களுக்கு ஜோடியாக சென்று வந்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். தற்போது சினேகா தமிழில் 'முரட்டுக்காளை' ரீமேக், 'விடியல்' மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். பிரசன்னா புதுப்படத்தில் நடிக்க கதை கேட்டுள்ளார். இது குறித்து 'தமிழ் முரசு' நிருபரிடம் பிரசன்னா கூறியதாவது:
சினேகாவை காதலிப்பது உண்மைதான். இது பற்றி இரு குடும்பத்துக்கும் தெரியும். அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம். தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நானும், சினேகாவும் கணவன், மனைவியாக மிக நெருக்கமாக நடித்தோம். சென்னை திரும்பிய பிறகு, விழாக்களில் அடிக்கடி சந்திப்போம். அப்போது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டோம்.
சேர்ந்து வாழ்ந்தால், எங்கள் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தோம். இருவருக்கும் ஒரே எண்ண அலைவரிசை இருப்பதால், குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இது கலப்புத் திருமணம். இவ்வாறு பிரசன்னா கூறினார்.

Post a Comment