முதுமையைப் பார்த்து பயமில்லை, இயற்கை தானே: மாதுரி தீக்ஷித்

|


முதுமையைப் பார்த்து நான் பயந்ததில்லை. அது இயற்கை தானே என்று பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் தெரிவித்துள்ளார்.

இத்தனை நாட்கள் அமெரிக்காவில் இருந்த பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் தற்போது குடும்பத்துடன் மும்பைக்கே வந்து செட்டிலாகிவி்ட்டார். 44 வயதிலும் 2 பிள்ளைகளின் தாயான மாதுரி அட்டகாசமாக உள்ளார்.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு,

நான் எனது சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டுகிறேன். வயதாகுகிறதே என்று நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அது இயற்கை. அதை நினைத்தாலும் தடுக்க முடியாது.

நடனமாடுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதி்ல் ஆத்ம திருப்தி கிடைக்கும். நான் நடனப் பயிற்சி மேற்கொள்கிறேன். அது பயிற்சிக்கு, பயிற்சியும் ஆகிவிட்டது, உடற்பயிற்சிக்கு, உடற்பயிற்சியுமாகிவிட்டது. எனது 2 மகன்களுக்கும் எனது படங்களைப் பார்ப்பது பிடிக்கும். படத்தைப் பார்த்து, ஏம்மா உங்களை எல்லோரும் மாதுரி தீக்ஷித்னு கூப்பிடுகிறார்கள். உங்கள் பெயர் நேனே தானே என்பார்கள்.

இல்லடா கண்ணுகளா இந்தியாவில் என்னை மாதுரி தீக்ஷித் என்று தான் தெரியும் என்பேன். அப்போ நிஜமாகவே நீங்கள் இந்தியாவில் பிரபலமான ஆளா என்று வியப்பார்கள். வார இறுதி நாட்களை எனது குடும்பத்துடன் செலவிடவே விரும்புகிறேன்.

குழந்தைகளை நல்லவிதமாக வளர்ப்பதில் முனைப்பாக உள்ளேன் என்றார்.
 

Post a Comment