ஷூட்டிங்கிலிருந்து சொல்லாமல் சென்றுவிட்டார் தருண்கோபி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தருண்கோபி, சரண்யா நாக் நடிக்கும் படம் 'சரவணகுடில்'. இந்தப் படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் புஷ்பராஜ் கூறியதாவது: கிராமத்தை மையமாக கொண்ட உணர்வுபூர்வமான கதை. அதற்கு தருண்கோபி பொருத்தமானவராக இருப்பார் என்று கருதியதால் தயாரிப்பாளர் சுந்தரவரதனும் நானும் அவரை ஒப்பந்தம் செய்தோம். அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. முதல் கட்டமாக மூன்றரை லட்சம் கொடுக்கப்பட்டது. வள்ளியூரில் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு கிளம்பினோம். 23 நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் தருண்கோபி, தான் அடுத்து இயக்க இருக்கும் 'காட்டுப்பய' என்ற படத்துக்கான டிரைலரை எங்கள் பட கால்ஷீட்டிலும், எங்கள் கேமராவிலும், எங்கள் பிலிமிலும் எடுக்க முயற்சித்தார். இதை தட்டிக் கேட்டேன். அவருக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்து பிரச்னை செய்ய ஆரம்பித்து, பிறகு சொல்லாமல் கொள்ளாமல் சென்னை திரும்பி விட்டார். இதனால் 23 நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில், நாங்களும் திரும்ப வேண்டியதாயிற்று. இதுவரை 55 லட்சம் செலவாகியுள்ளது. நாங்கள் தருண்கோபியை எவ்வளவோ சமாதானம் செய்தோம். அவர், 'இப்போது என்னோட ரேஞ்சே வேறு, 20 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன்' என்று சொல்கிறார். இதனால் படம் தொடங்க முடியாமல் பாதியில் நிற்கிறது. இயக்குனராக எனது எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விஷயத்தில் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசித்து வருகிறோம். உண்மையில்லை: தருண்கோபி இதுகுறித்து தருண் கோபியிடம் கேட்டபோது, கூறியதாவது:

'சரவணகுடில்' இயக்குனர் சொல்வதில் உண்மை இல்லை. இன்னொருவர் படத்தில் நடிக்கும்போது எப்படி என் படத்து டிரைலரை எடுக்க முடியும். நானும் இயக்குனர்தான். நடன இயக்குனர் காதல் கந்தாஸ் எடுக்கச் சொன்ன சில ஷாட்கள்தான் எடுக்கப்பட்டது. அதை அவர் தவறாகப் புரிந்து கொண்டு கேட்க கூசுகிற ஆபாச வா£த்தைகளை பேசியதால் சொல்லிவிட்டுதான் திரும்பினேன். அப்படி இருந்தும் மதுரையில் காத்திருந்தேன். யாரும் அழைக்கவில்லை. சென்னை வந்து விட்டேன். அதன் பிறகு 30 முறை தேதி குறித்தார்கள். படப்பிடிப்பை நடத்தவில்லை. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? படத்துக்காகப் பேசப்பட்ட சம்பளத்தில் ஒரு பைசா கூட கூடுதலாக கேட்வில்லை. நாளைக்கே ஷூட்டிங் வைத்தாலும் நடிக்கத் தயார்தான். சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் என் பெயரைக் கெடுக்க சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் அதில் இதுவும் ஒன்று.


 

Post a Comment