பாரதிராஜா படத்திலிருந்து பார்த்திபன் விலகல்!

|


பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து விலகுவதாக நடிகர் பார்த்திபன் அறிவித்துள்ளார்.

பாரதிராஜா எடுக்கவிருக்கும் புதிய படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவிருந்தார் பார்த்திபன்.

இதற்காக முறுக்கு மீசை, கட்டான உடல் என தயாராகி வந்தார் பார்த்திபன்.

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விரைவில் தொடங்கவிருக்கிறது. படபூஜையும் கூடமதுரையிலேயே நடக்கிறது.

இந்த நிலையில், அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடிக்காமல் விலகிக் கொண்டதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அப்படத்தில் நான் பங்கேற்கவில்லை! காரணங்கள் சொல்லலாமே தவிர, சொல்வதெல்லாம் காரணமாகி விடாது!" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Post a Comment