இளையராஜா மனைவி மறைவுக்கு கவர்னர் இரங்கல்

|


சென்னை: இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவாவின் மறைவுக்கு தமிழக கவர்னர் ரோசையா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் மனைவி ஜீவா, திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாரதிராஜா உள்ளிட்ட அரசியல், திரையுலக, சமூக அமைப்புகளைச் சேர்ந்த பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஜீவாவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், "உங்கள் மனைவி ஜீவாவின் திடீர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதற்காக உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதுடன், உங்கள் மனைவியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்,'' என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஜீவாவின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க இளையராஜாவுக்கு நெருக்கமான திரையுலகினர் பண்ணைப்புரம் சென்றுள்ளனர்.
 

Post a Comment