பி.ஆர்.என்டர்டயின்மென்ட் தயாரிக்கும் படம் 'ஒத்திகை'. ஜெய் ஆகாஷ், அர்ச்சனா சர்மா, மோகன கிருஷ்ணன், ஷக்தி நடிக்கிறார்கள். ஜான்பீட்டர் இசை. ஆறுமுகம் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் ஏ.எம்.பாஸ்கர் கூறியதாவது: உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் தற்கொலை முனை உள்ளது. இங்கு நடக்கும் தற்கொலைகளில் 80 சதவிகிதம் திட்டமிட்ட கொலைகள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அந்த ஆய்வின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்கொலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், சுற்றுலா செல்லும் இளம் ஜோடிகள் முன் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வைக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. காமெடி, காதல் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். 18-ம் தேதி வெளிவருகிறது.
Post a Comment