மீண்டும் மன்னனாகும் சூப்பர் ஸ்டார்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி நடிக்கும் புதுப்படத்துக்கு ''கோச்சடையான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ''கோச்சடையான்' இந்தியாவில் தயாராகும், நடிப்பை பதிவிறக்கம் செய்யும் முதல் 3டி படமாகும். ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயாரான 'அவதார்', ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் உருவான 'டின் டின்' ஆகிய படங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தில் உருவானவை. சரித்திரப் பின்னணியில் உருவாகும் 'கோச்சடையான்' படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றுள்ளார். ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சவுந்தர்யா அஸ்வின் இயக்குகிறார். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஷூட்டிங், விரைவில் தொடங்குகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி இந்த படத்தில் பாண்டிய நாட்டு மன்னனாக நடிக்கிறார். கிபி.670 முதல் கிபி -710 ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பெயர் 'கோச்சடையான்'. கோ என்றால் அரசன், சடையான் என்றால் சிவன் பக்தர் என்று அர்த்தமாம் ஏற்கனவே தீவிர சிவன் பக்தனான சூப்பர் ஸ்டார், அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா என தனது முந்தைய படங்களில் சிவனை குறிப்படும் பெயர்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Post a Comment