தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படம் 'எரியும் தனல்'. மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை விரும்பும் பாலா, இந்த படத்தில் 200 துணை நடிகர்களை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பாலா படத்தில் நடிக்க ஆசையாக இருந்த துணை நடிகர்கள், பாலா ஒரு அதிர்ச்சி கொடுத்தாராம். அது என்ன தெரியுமா... அத்தனை பேருக்கும் மொட்டை போட்டு நடிக்க வைத்துள்ளாராம். படத்தின் கதைக்கு தேவைப்படுவதால் 200 துணை நடிகர்களும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டனர். அதுமட்டுமின்றி பட ஷூட்டிங் முடியும் வரை மொட்டையில் இருக்குமாறு துணை நடிகர்களை பாலா கேட்டுக் கொண்டாராம்.
Post a Comment