தமிழில் தொடர்ந்து ஐந்து படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. ஆரம்பத்தில் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அனுஷ்கா, 'ரெண்டு'படம் மூலம் தமிழுக்கு வந்தார். பிறகு தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் தமிழில் நடிக்க கேட்டும் கால்ஷீட் இல்லை என்று மறுத்து வந்தார். இந்நிலையில் 'வேட்டைக்காரன்' மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரியான அனுஷ்காவுக்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 'சிங்கம்', 'தெய்வத்திருமகள்' படங்களில் தொடர்ந்து நடித்த அவர், மீண்டும் தெலுங்குக்கு சென்றார். இப்போது அங்கிருந்து தமிழில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
விக்ரம் நடிக்கும், 'தாண்டவம்', கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாதப் படம், செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் மற்றும் சூர்யா, அஜீத் நடிக்கும் படங்கள் என மொத்தம் 5 படங்களில் நடிக்கிறார். இதுதவிர மேலும் சில படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது. 'திடீரென்று அனுஷ்கா தமிழில் கவனம் செலுத்துவதற்கு தெலுங்கு பட உலகில் ஏற்பட்ட பிரச்னைதான் காரணம். அங்கு அவருடைய வீட்டில் அடிக்கடி வருமான வரி ரெய்டு நடந்ததும் இதற்கு பின்னால் சிலர் இருப்பதாகவும் அவர் நினைக்கிறார். இதனால் வெறுத்துப் போன அவர், தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்' என்று தெலுங்கு சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Post a Comment