முல்லைப் பெரியாறு- கேரளாவைக் கண்டித்து தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்படுகின்றன

|


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளம் நடந்து கொள்ளும் போக்கைக் கண்டித்து ஒரு நாள் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறுகையில்,

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசின் அராஜக போக்கை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கண்டிக்கிறது. இந்த பிரச்சினையில் எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், அவர் கரத்தை வலுப்படுத்தும் வகையில், திரையரங்குகளை மூட முடிவு செய்து இருக்கிறோம்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 1450 திரையரங்குகளும் அன்று மூடப்படும். அந்த தியேட்டர்களில் அன்று ஒருநாள் மட்டும் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.

தியேட்டர்கள் எப்போது மூடப்படும் என்பதை இன்று சங்கம் அறிவிக்கவுள்ளது.
 

Post a Comment