தமிழில் ஹிட்டான 'மைனா', கன்னடத்தில் 'ஷைலு' வாக ரீமேக் ஆகியுள்ளது. நேற்று ரிலீசாகியுள்ள இந்தப் படம் பற்றி பாமா கூறியதாவது: அமலா பால் ஏற்ற வேடத்தில் நடித்துள்ளேன். தமிழில் 'மைனா'வை பார்த்ததும் அமலாவின் கேரக்டர் மீது ஈடுபாடு ஏற்பட்டது. கன்னடத்தில் அந்த வாய்ப்பு வந்ததும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். இதில் அமலாவின் நடிப்பை இமிடேட் செய்யவில்லை. எனது ஸ்டைலில் நடித்துள்ளேன். ஹீரோவாக நடித்த கணேஷும் சிறப்பாக நடித்துள்ளார். காடுகளில் படப்பிடிப்பு நடந்தபோது மிகவும் கஷ்டப்பட்டோம். படமாகப் பார்க்கும்போது அந்த கஷ்டம் தெரியவில்லை. எனது உடல்வாகிற்கு கிளாமர் ஒத்துவராது என்பதால் அப்படி நான் நடிக்க மாட்டேன்.
Post a Comment