ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெயராமன், எல்ரெட் குமார், ஜேம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'. அதர்வா, அமலா பால் ஜோடி. ஒளிப்பதிவு, சக்தி. இசை, ஜி.வி.பிரகாஷ் குமார். பாடல்கள், தாமரை. எல்ரெட் குமார் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட, கே.வி.ஆனந்த் பெற்றுக்கொண்டார். ஜீவா, வெற்றிமாறன், ஏ.எல்.விஜய், சிந்து, அனுபமா, ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயராமன், எல்ரெட் குமார், ஜேம்ஸ் நன்றி கூறினர்.
Post a Comment