ஒஸ்தியில் சிம்புடன் ஒஸ்தியான டான்ஸ் ஆடிய மல்லிக்கா, அடுத்து 'ஒய் திஸ் கொல வெறி' பாடலுக்கும் ஆட தயார் என தெரிவித்துள்ளார். 'ஒய் திஸ் கொல வெறி' பாடல் பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் டிவி ஷோக்களிலும் 'why this kolaveri di' பாடல் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடப்பதே இல்லை. இச்த பாடலின் உரிமம் பெற ஷாரூக்கான் மற்றும் அக்ஷய குமார் இடையே பெரிய போட்டியே நடந்தது. இறுதியில் அக்ஷய குமார் பாடலின் உரிமமத்தை பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில் 'ஒய் திஸ் கொல வெறி' பாடல் தனக்கு ரொம்பவும் பிடித்துள்ளதாகவும், பட தயாரிப்பாளர் விருப்பபட்டால் ஆட தயாராக உள்ளதாகவும் மல்லிக்கா கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கதையாக சரியாக அமைந்தால், இனி தமிழ் சினிமாவில் நடிக்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment