டாக்கிங் டைம்ஸ் மூவீசுக்காக பட்டியல் சேகர், மதுபாலா தயாரிக்கும் படம், 'கழுகு'. சத்யா சிவா இயக்குகிறார். கிருஷ்ணா, பிந்து மாதவி ஜோடி. சமீபத்தில் மூணாறு மலையில் இதன் ஷூட்டிங் நடந்தது. இதுபற்றி கிருஷ்ணா கூறியதாவது: எங்கள் ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்த ரசிகர் ஒருவர், திடீரென்று எல்லோரையும் பாறைகளுக்கு இடையே மறைந்துகொள்ளச் சொல்லி கத்தினார். எல்லோரும் மறைந்திருந்தோம். அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மறுபடியும் அந்த ரசிகர் குரல் கொடுத்த பிறகு வெளியில் வந்தோம். 'படையப்பா' என்ற யானை, இதுவரை ஐந்துபேரை விரட்டிச்சென்று கொன்றிருக்கிறதாம். ஷூட்டிங் நடந்த இடத்துக்கு அருகே அந்த யானை சென்றுகொண்டிருந்ததாகவும் எங்களைப் பார்த்திருந்தால் விரட்டியிருக்கும் என்றும் சொன்னார்கள். பிறகு அங்கு ஷூட்டிங் நடத்தாமல், வேறு இடம் சென்றோம்.
Post a Comment