தமிழர் விரோத அமைப்பு என நிரூபித்தால் : சுவிஸ் விழாவை ரத்து செய்ய தயார்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
''சுவிட்சர்லாந்தில் விழா நடத்தும் அமைப்பு தமிழர்களுக்கு விரோதமான அமைப்பு என நிரூபித்தால் விழாவை ரத்து செய்ய தயார்'' என்றார் சங்கீதா. புத்தாண்டு தினத்தன்று சுவிட்சர்லாந்தில் தமிழர் அமைப்பு ஒன்று நடத்தும் விழாவில் கலந்துகொள்கின்றனர் நடிகை சங்கீதா அவரது கணவர்-பாடகர் கிரீஷ். இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபற்றி சங்கீதா கூறியதாவது:
எனக்கு நடிப்பதும், கிரிஷுக்கு பாடுவதும்தான் தொழில். இதைவிட்டால் எங்களுக்கு வேறு வேலை தெரியாது. சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளோம். ஆனால் அந்த அமைப்புக்கு எதிரான மற்றொரு அமைப்பு எங்களை தடுக்க முயற்சிக்கிறது. போனிலும், இமெயிலும், 'உங்களை அழித்துவிடுவோம்' என்று கொலை மிரட்டல் வருகிறது.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அமைப்பு தாங்கள் உண்மையான தமிழர் ஆதரவு அமைப்பு என்பதை ஆதாரங்கள் மூலம் நிரூபித்திருக்கிறது. மற்றொரு அமைப்பு அதை மறுத்து எந்த ஆதாரமும் தரவில்லை. இந்நிலையில் உண்மையான அமைப்பு நடத்தும் விழாவில் கலந்துகொள்வதை யாரும் தடுக்க முடியாது. ஒருவேளை விழாவுக்கு ஏற்பாடு செய்த அமைப்பு தமிழர் விரோத அமைப்பு என்பதற்கு யாராவது சரியான ஆதாரம் காட்டினால் அந்த விழாவை புறக்கணிக்க தயார்.


 

Post a Comment