தமிழக மக்களுக்கு தமிழனாகிய நான் கடமைப்பட்டுள்ளேன் :- ஏ.ஆர்.ரகுமான்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டேம் 999 படம் ஆஸ்கர் விருது பெற வாழ்த்தது தெரிவித்தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டெல்லி ஆக்ராவில் நடைபெற்ற விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பான ஏக் தீவானா தா படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் டேம் 999 ப பாடல்கள் ஆஸ்கர் விருது தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிடும்போது சக இசையமைப்பாளர் என்ற முறையில் ஆவுசுப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் சிலர் இதனை வேறு விதமாக கூற தொடங்கியுள்ளனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

தமிழனாகிய எனக்கு என் வளர்ச்சியில் தமிழக மக்கள் மிகவும் உறுதுணையாகவும், முக்கியத் தூணாகவும் இருந்து வருகிறார்கள். அதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். கடந்த 3 வாரங்களாக நான் ஹாலிவுட் பணியில் அமெரிக்காவில் மூழ்கி இருந்ததால், தமிழ்நாடு, கேரளாவில் நடந்து வரும் முல்லைப் பெரியாறு பிரச்சினை எந்த அளவுக்கு தீவிரமானது என்பதை நான் உணரவில்லை. இந்தப் பிரச்சினையில் முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாமின் நிலைப்பாட்டினை நான் மதிக்கிறேன். இந்தியாவின் வேகமான வளர்ச்சியைப் பார்த்து இன்று உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் நமது ஒற்றுமையே... அதனைக் கட்டிக் காப்பது மிகவும் முக்கியம். என் அருமை ரசிகர்களுக்கு எனது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் ரஹ்மான்.


 

Post a Comment